விநாயகர் மெனு!
ADDED :5242 days ago
பானை வயிறு போல பெருத்த தொந்திக்கணபதியான பிள்ளையாருக்குப் பிடித்தமான பட்சணங்கள் ஒன்றிரண்டு அல்ல. அதிரசம், அப்பம், அமுது, அவல், இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கடலை, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், சீனிப்பாகு, தயிர், தினைமாவு, தேங்காய், தேன், நாவல்பழம், நெய் பணியாரம், பச்சரிசி மாவு, பொரி மாவு, பயிறு, பனங்கிழங்கு, சர்க்கரைப் பாகு, பலாப்பழம், பால், பிட்டு, புளியோதரை, மாதுளங்கனி, மாம்பழம், மிளகு சாதம், மோதகம், லட்டு, வடை, வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், வெண்ணெய், வெண்பொங்கல், வெள்ளரிக்காய், விளாம்பழம் இவையனைத்தும் விருப்ப மானவை. அருணகிரிநாதரும், கபிலதேவ நாயனாரும் விநாயகருக்குப் பிடித்த இந்த உணவு வகைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்து உள்ளனர்.