உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தப்பன் கோவிலில் வெள்ளாட்ட திருவிழா

முத்தப்பன் கோவிலில் வெள்ளாட்ட திருவிழா

கோவை: சுங்கம் பார்க் டவுன் அருகே உள்ள, ஸ்ரீமுத்தப்பன் கோவிலில், மலையாள பாரம்பரிய முறைப்படி திருவேஷம் கட்டும் திருவொப்பன வெள்ளாட்ட நிகழ்ச்சி நடந்தது. கேரள மாநிலம் கண்ணனுார் அருகே பரசினிகடவு என்ற இடத்தில், பள்ளிக்கொண்ட நிலை யில், அருள்பாலித்து வரும் ஸ்ரீமுத்தப்பன், கோவை சுங்கம் பார்க் டவுனிலுள்ள கோவிலில் அருள் பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில்,  முத்தப்பனுக்கு, திருவொப்பன வெள்ளாட்டத்திருவிழா நடக்கிறது.  இதில் கேரள பாரம்பரிய முறைப்படி, சிவனைப்போன்று ஒரு பாதி உருவமும், மற்றொரு பாதியில் விஷ்ணு உருவத்தையும் போன்று வேடமணிந்து, கதகளி நடனம் போன்றவை வெள்ளாட்ட நிகழ்ச்சியில் இடம் பெற்றன. கோவில் வளாகத்தில் மகாஅன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !