சூரிய பிரபை வாகனத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி வீதியுலா!
ADDED :3502 days ago
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில், நான்காம் திருநாளான நேற்று காலை, சூரிய பிரபை வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. சுவாமி முன்னால், திவ்ய பிரபந்த கோஷ்டியினர், பிரபந்தத்தை ஓதியபடி சென்றனர். வரும், 28ம் தேதி, காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி பகல் 11:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 8:00 மணிக்கு கண்ணாடி பல்லக்கு வீதியுலாவும், மே 1ம் தேதி இரவு சப்தாவர்ணமும் நடைபெறுகின்றன.