உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டவெளியில் சிவன்.. கவனிக்க யாரும் இல்லை!

வெட்டவெளியில் சிவன்.. கவனிக்க யாரும் இல்லை!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கும், திருவெண்ணைநல்லூருக்கும் இடையே உள்ள எடப்பாளையம் என்ற கிராமத்தில் வெட்டவெளியில் யாரும் கவனிக்காத நிலையில் ஒரு சிவலிங்கம் மற்றும் நந்தியின் விக்ரகம் உள்ளது.

சர்வலோகத்தையும் ஆளும் ஈசனின் நிலை இப்படி உள்ளது. இவ்வூர் மக்கள் எந்த முயற்ச்சியும் எடுக்காமல் ஒதுங்கியே உள்ளார்கள். எந்த ஒரு அபிஷேகமோ ஆராதனையோ இல்லை.  வாரம் ஒருமுறையோ மாதம் ஒருமுறையோ தீபம் போடுகிறார்கள். மற்ற நாட்களில் ஏதும் இல்லை. அழகே வடிவான ஐயனின் மேனியில் ஒரு ஆடைகூட இல்லை அடியார் பெருமக்கள் சிவனை ஒரு நல்ல நிலையில் வைக்க வேண்டும். அனைவரும்  ஒன்றிணைந்து முயற்ச்சி எடுத்து சிவனுக்கு வெயில் படாமல் மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும். தினமும் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற வேண்டும். ஐயன் மனம் குளிரவேண்டும்.

சிவனுக்கு சேவை செய்ய விருப்பமுள்ள அடியார்கள் கீழ்கண்ட அலை பேசியில் தொடர்பு கொள்ளவும். 8973036348, 9176757479


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !