உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

புதுச்சேரி: மீனாட்சிப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மீனாட்சிபேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. கடந்த 22ம் தேதி செடல் உற்சவமும், நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காமாட்சியம்மன் கோவில்: வைசியாள் வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !