உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

புதுச்சேரி: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து 12ம் தேதி வரை தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏழாம் நாளான 13ம் தேதி செடல், மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. இதில் செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றிலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 18ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 19ம் தேதி தர்ம பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை செட்டிப்பட்டு கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !