உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமலை தீர்த்தத்தில் உடை மாற்றும் அறை கட்ட கோரிக்கை

பெரியமலை தீர்த்தத்தில் உடை மாற்றும் அறை கட்ட கோரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, பெரியமலை தீர்த்தம் அருகே உடை மாற்றும் அறை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த பாளேகுளி அருகே பெரியமலை உள்ளது. மலையடிவாரத்திலும், மேற்புறத்திலும் பெருமாள் கோவில் உள்ளது. அடிவார கோவில் அருகே பிரசித்தி பெற்ற பெரியமலை தீர்த்தம் உள்ளது. புரட்டாசி மாதம் மட்டுமின்றி, வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் இங்கு வந்து மொட்டை அடித்து, தீர்த்தத்தில் நீராடி வருகின்றனர். ஆனால், குளத்தின் அருகே உடை மாற்றும் அறை இல்லாததால், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !