கருட வாகனத்தில் வேணுகோபாலன்
ADDED :3653 days ago
ஆர்.கே.பேட்டை : சித்திரை பிரம்மோற்சவத்தில், சந்தான வேணுகோபால சுவாமி, நேற்று காலை, நாச்சியார் பல்லக்கிலும், இரவு, கருட வாகனத்திலும் எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தானவேணுகோபால சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, நாச்சியார் பல்லக்கு சேவையும், இரவு, கருட வாகன சேவையும் நடந்தது. நாளை மறுதினம், தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று இரவு, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்கிறார். வரும் சனிக்கிழமை, சக்கரஸ்தானத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.