ஏ. கல்லுப்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3650 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கேட்டை அருகே ஏ. கல்லுப்பட்டி சித்தி விநாயகர் கோயில் 75 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம் மற்றும் புற்றுமண் எடுத்து வரப்பட்டு,காலையில் விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்ணியாஹவசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து மூலமந்திர ஹோமம் கடம் புறப்பாடு, கோபுர கலச கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.