புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!
ADDED :3577 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பல்லடம் ரோடு புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இக்கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 28ம் தேதி புனித தீர்த்தம், முளைப்பாரி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக, வாஸ்து சாந்தி கும்பஸ்தானம், முதல் கால யாகம் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு ஸ்ரீசிவசூர்ய பூஜை, நான்காம் கால யாகம் உள்ளிட்ட சடங்குகளும், காலை, 8:15– 9:00 மணிக்கு விமானத்திற்கு மகா கும்பாபிேஷகமும், தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிேஷகம் நடந்தன. தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் அன்னதானம், 10:00 மணிக்கு மகா அபிேஷகம், தசதரிசனம், கோபூஜை, அஸ்வபூஜை, கஜபூஜை இடம்பெற்றன. கும்பாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகம் நடந்ததையொட்டி, இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.