மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம்
ADDED :3812 days ago
புதுச்சேரி: வீராம்பட்டினம் கடற்கரையில் மணல் லிங்கத்திற்கு நேற்று பால் அபி ஷேகம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வீராம்பட்டினம் கடற்கரையில், அய்யங்குட்டிப்பாளையம் மார்கண்டேயர் திருமடம் சார்பில், ஐந்து ஆண்டுகளாக மணலால் லிங்கம் செய்து வைத்து, பால் அபிஷேகம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கடற்கரை அம்மன் கோவில் எதிரில் பிரம்ம முகூர்த்ததில் பிரம்ம கர்த்திதோம் நீங்குவதற்காக விசேஷ பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.