திரவுபதியம்மன் அக்னி வசந்த உற்சவத்தில் இன்று அர்ச்சுனன் தபசு!
ADDED :3788 days ago
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன், அக்னி வசந்த உற்சவத்தில், இன்று மாலை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், வரும் 8ம் தேதி, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம், மோட்டூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு, பகாசூரன் கும்பம் படைக்கப்பட்டது. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடந்து வருகிறது. இன்று, மாலை 6:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெறும். வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.