ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழா
ADDED :3438 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர், 1,000வது ெஜயந்தி விழா நேற்று துவங்கியது. ஸ்ரீபெரும்புதுாரில், தற்போது, 999வது ஆண்டு, ராமானுஜர் அவதார உற்சவ திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 2017ம் ஆண்டு, ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மடுவன்கரையில் தனியார் பள்ளியில், ராமானுஜர், 1,000வது ஜெயந்தி துவக்க விழா நடந்தது. விழாவில், பூஜ்ய ஸ்ரீ ப்ரேமா பாண்டுரங் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில், ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், ஆமருவி தேவநாதன் எழுதிய, நான் இராமானுசன் என்ற புத்தகத்தை, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வெளியிட்டார்.