திருப்பதி லட்டில் பூரான் பக்தர்கள் கடும் அதிர்ச்சி!
ADDED :3438 days ago
திருப்பதி: திருமலை லட்டு பிரசாதத்தில், பூரான் இருந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தேவிபிரசாத் என்பவர், நேற்று, தன் குடும்பத்துடன், 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்த பின், நான்கு லட்டு பிரசாதங்களை பெற்றார். அதில், ஒன்றை சாப்பிடும் போது, கறுப்பு பூரான் இருந்தது. இத னால், அவர் கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமலை லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், லட்டில் பூரான் இருந்த சம்பவம் அதை நிரூபித்து உள்ளது.