மகாலெட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திரிதியை விழா
ADDED :3439 days ago
திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி மகாலெட்சுமி குபேரர் திருக்கோவிலில் அட்சய திரிதியை விழா நடந்தது. இங்கு நேற்று முன்தினம் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சித்ரலேகா சமேத குபேரருக்கு பிரியமான நாணய பூஜை செய்து, பூஜிக்கப்பட்ட வெள்ளிக் காசும், குபேர யந்திரமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக குபேர கணபதிக்கும், குபேர லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. குருவார விழாவை முன்னிட்டு மே 12ல் மகாலட்சுமி வசிய ஹோமம், மகாலெட்சுமி குபேரருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளன. தகவல்களுக்கு 9500474731ல் தொடர்பு கொள்ளலாம்.