சின்னசேலம் கோவிலில் அட்சய திருதியை பூஜை
ADDED :3440 days ago
சின்னசேலம்: சின்னசேலம் விஜயபுரம் செல்வமுருகன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னசேலம் விஜயபுரம் செல்வமுருகன் கோவிலில் உள்ள குபேர லட்சுமி சுவாமிக்கு, அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கு÷ பர லட்சுமிக்கு 17 வகையான அபிஷேகங்கள் செய்து, சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வைத்தனர். விழா ஏற்பாட்டினை டாக்டர் மோகன் செய்திருந்தார். மகா தீபாராதனையை சின்னராசு செய்தார்.