சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் தேர்தலுக்காக சிறப்பு பிரார்த்தனை
ADDED :3440 days ago
கோவை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக, திருச்சி ரோடு சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில், ‘சங்கிலி தொடர் ஜெபம்’ என்ற தலைப்பில், சிறப்பு பி ரார்த்தனை நடத்தப்பட்டது. சபை போதகர் ஜான் குணசீலன், உதவி போதகர் பால் டேவிஸ், சபை நிர்வாக கமிட்டி செயலாளர் ஜேக்கப், பொருளாளர் பரமானந்தம், சி.எஸ்.ஐ., திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும் ஒருங்கிணைந்து, இந்த சிறப்பு சங்கிலி தொடர் ஜெபம் நடத்த, கடந்த மாதம் திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஏற்கனவே பெயர் பதிவு செய்த நுாற்றுக்கணக்கான சபை மக்கள், தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடக்கவும், நிலையான அரசு தேர்ந்தெடுக்கப்படவும், மக்கள் நுாறு சதவீதம் ஓட்டுப்போடவும், மக்களுக்கு விருப்பமான அரசு ஆட்சியில் அமரவும் உருக்கமாக ஜெபித்தனர்.