சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் திறப்பு ரூ.8.48 லட்சம் வசூல்
ADDED :3435 days ago
சேலம்: சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில், ரூ.8 லட்சத்து, 48 ஆயிரத்து 342 வசூலானது. சேலம் தேர்வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. கோவிலின் உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பாளர் உமாதேவி மேற்பார்வையில், ஜெயராம் கல்லூரி மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ரூபாய் மற்றும் சில்லரை காசுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த, 45 நாட்களில், 8 லட்சத்து, 48 ஆயிரத்து, 342 ரூபாய், ஆறு கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி, ஓமன் நாட்டு, 20 ரியல் நோட்டு ஒன்று என, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.