நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா துவங்கியது
ADDED :3435 days ago
சேத்துார்: தேவதானம் உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலையில் பல்வேறு யாகசாலை பூஜைகள், சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் தொடர்ந்து, கோயில் அறங்காவலர் துரைராஜசேகர் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தினசரி சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும்.7ம் நாளன்று திருக்கல்யாணம் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20 நடைபெறுகிறது. ஏற்பாடை பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர்,செயல் அலுவலர் அறிவழகன் செய்தனர்.