பொன்னா விடைச் செல்விஅம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :3434 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வடவன்பட்டி பிரியாவிடை நாயனார்- பொன்னா விடைச் செல்விஅம்மன் கோயில் பத்துநாள் வைகாசி திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. சுவாமி,அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. மே 19ல் சுவாமி திருக்கல்யாணம்,ஒன்பதாம் நாளான மே20 ல் தேரோட்டம் நடக்கிறது. 10ம் நாள் ஒப்பிலான்பட்டி மணிமுத்தாற்றில் சுவாமி தீர்த்தவாரி,இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.