நங்கியானந்தல் கிராமத்தில் கோவில் தேர் திருவிழா
ADDED :3435 days ago
செஞ்சி: நங்கியானந்தல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா நங்கியானந்தல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் ஊரணி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தினமும் பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. 10ம் தேதி 8வது நாள் திருவிழாவாக சாகை வார்த்தலும், மாலை 6 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் முத்து மாரியம் மன், விநாயகர், முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தனர்.