உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி நாகம்மன் கோவிலில் சித்திரை உற்சவம்

விக்கிரவாண்டி நாகம்மன் கோவிலில் சித்திரை உற்சவம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சித்திரை ஐந்தாம் வெள்ளி உற்சவம் நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு வினாயகர். முருகன், அஷ்டலட்சுமி, நாகம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நாகம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு அம்மன் வீதி உலா நடந்தது. அபிராம குருக்கள் தலைமையில் சந்திர சேகர் குருக்கள், கிரிதரன் குருக்கள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் வெங்கட கிருஷ்ணன். தக்கார் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !