விருத்தாசலம் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவங்கியது!
ADDED :3561 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 7:30க்கு மேல் 9:00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமறை, தீர்த்தம் வினியோகம், பிற்பகல் சேவாகாலம், சாத்துமறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு அலங்கரித்த சந்திரபிரபை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். தினசரி காலை சிறப்பு திருமஞ்சனம், இரவு அம்ச வாகனம், கருட, சேஷ, அனுமன், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வாக வரும் 27ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.