உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுதலைப்பூண்டி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா

சிறுதலைப்பூண்டி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா

அவலுார்பேட்டை: சிறுதலைப்பூண்டி திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, சிறுதலைப்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. நேற்று காலையில் துரியோதனன் படுகளமும், பின் தீ மிதித்தலும் நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் மற்றும் விழா குழு வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !