உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டி பெருமாள் கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்

பூண்டி பெருமாள் கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்

ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில், நடந்து வரும் பிரம்மோற்சவ நிகழ்ச்சி யின் முக்கிய விழாவான கருடசேவை விழா, இன்று நடைபெற உள்ளது. பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில். பழமைவாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 18ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னிபிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், த்வஜபிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. கடந்த 19ம் தேதி, காலை, 7:30 மணிக்கு கொடியேற்றம், நவசாந்தி பிரதிஷ்டை, ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை, உற்சவர் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காலை, 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறையும், திருமஞ்சன காலத்தில் உபநிஷத்தும், பஞ்சஸூக்தமும் நடத்தப்பட்டது. கடந்த 20ம் தேதி, உற்சவர் சேஷ வாகனத்திலும், 21ம் தேதி, சந்திரபிரபை வாகனத்திலும், நேற்று, பல்லக்கு வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று, மாலை, 5:30 மணிக்கு கருடசேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !