ராமனின் வரவேற்பு நிகழ்ச்சி!
ADDED :3430 days ago
பதினான்கு வருட வனவாசம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். அவரைக் கண்ட அயோத்தி மக்கள் அன்பினால் மலர் துõவி வரவேற்றனர். அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது, பரதன் பாதுகைகளை தாங்கி வந்தான். சுக்ரீவன், விபீஷணன் இருவரும் கவரி வீசினர். அனுமன் வெண்கொற்றக்குடை பிடித்தான். வில், அம்பினை சத்ருக்கனன் தாங்கி வந்தான். சீதை தீர்த்தக் கமண்டலம் பிடித்திருந்தாள். அங்கதன் உடைவாளும், ஜாம்பவான் தங்கக் கவசமும் வைத்திருந்தனர். அன்னையரான கோசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் வணங்கிய ராமர் அரியணையில் அமர்ந்தார். புனித தீர்த்தத்தால் வசிஷ்டர் அபிஷேகம் செய்தார். முழுநிலவு போல ராமர் காட்சியளித்தார். திரேதாயுகம் போய் மீண்டும் சத்தியயுகமே வந்தது போல மக்கள் சந்தோஷத்தில் மிதந்தனர்.