வேல் ஆழ்வார்
ADDED :3430 days ago
திருக்கார்த்திகையன்று அவதரித்தவர் திருமங்கையாழ்வார். திருவாலி என்னும் தலத்தில், நீலன் என்னும் சேனாதிபதிக்கு பிறந்தார். குமுதவல்லியை மணப்பதற்காக திருநறையூர் நம்பியிடம் திருவிலச்சினை (சங்குசக்கர முத்திரை) இட்டுக் கொண்டார். மனைவியின் வேண்டுகோள்படி அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்தார். இதனால் செல்வத்தை இழந்தநிலையில், அன்னதானத்துக்காக வசதி மிக்கவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார். இவரைத் திருத்த பெருமாள் முடிவெடுத்தார். மாப்பிள்ளை கோலத்தில் லட்சுமியுடன் அவர் முன் வந்தார். திருமங்கையாழ்வார் அவர்களிடம் கொள்ளையடிக்க முயற்சித்த போது, அவரது காதில் எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என உபதேசித்தார். கையில் வேலுடன் காட்சி தரும் ஆழ்வார் இவர்.