உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோவிலில் தடையால் மரபொம்மையாக மாறிய நரி

மீனாட்சி கோவிலில் தடையால் மரபொம்மையாக மாறிய நரி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், நேற்று நடந்த, நரியை, பரி (குதிரை) யாக்கிய லீலையில், வனத்துறை தடையால் உயிருள்ள நரிக்கு பதில், மரபொம்மை பயன்படுத்தப்பட்டது. இக்கோவில் ஆவணி மூலத் திருவிழாவில், தினமும் சுவாமி சுந்தரேஸ்வரரின் லீலை நடக்கிறது. நேற்று "நரியை பரியாக்கிய லீலை நடந்தது. இதற்காக மதுரை அனுப்பானடியிலிருந்து, ராமசுப்பிரமணியன் என்பவரின் குடும்பம், உயிருள்ள நரியை கோயிலுக்கு எடுத்து வருவர். இந்தாண்டு இதற்கு வனத்துறை தடைவிதித்தது. இதனால், பொம்மை நரியை பயன்படுத்த முடிவு செய்தனர். நரி பொம்மை கிடைக்காததால், குதிரையை மட்டும் வைத்து லீலை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், ஆண்டுதோறும் நடக்கும் இந்த லீலை ஐதீக முறைப்படி நடக்க, நேற்று ராமசுப்பிரமணியன் குடும்பத்தினர் மரத்தாலான நரி பொம்மையை, உடனடியாக தயார் செய்து, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !