உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆதிசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை : நெடும்பாறை ஆதிசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.தமிழக - கேரள எல்லையில் சித்தூர் தாலுகா, நெடும்பாறை கிராமம். இங்குள்ள விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளைய சந்நிதானம் மருதாசல அடிகள் ஆசியுடன், சிவசாந்தலிங்கர் அருட்பணிமன்றத்தினால் நடக்கிறது. விழாவை முன்னிட்டு 7ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாட்டுடன் தொடங்கி 8ம் தேதி காலை 6.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, பேரொளி வழிபாடும், 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் ஆதிசக்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு அன்னம்பாலிப்பு, அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !