உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத்துக்கு மீண்டும் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை!

கேதார்நாத்துக்கு மீண்டும் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை!

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு, பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மீண்டும் ஆபத்து ஏற்படும் என, தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரிஷ் ராவத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் ரிஷிகேஷ், ஹரித்வார், ருத்ர பிரயாக் உள்ளிட்ட, ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த தலங்களை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த, 2013, ஜூன் மாதம், உத்தரகண்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மந்தாகினி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கேதார்நாத் கோவிலுக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அடித்து செல்லப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தற்போது, மந்தாகினி மற்றும் சரஸ்வதி ஆறு சங்கமிக்கும் பகுதியில் புதிதாக, பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால், மந்தாகினி ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, வேகம் அதிகரித்துள்ளது. ஆற்றின் நீரோட்ட வேகம் அதிகரிப்பதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உயிர்சேதம் ஏற்படும் என, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் மற்றும் தேசிய நீரியல் நிறுவன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !