உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் உற்சவம்!

சேத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் உற்சவம்!

காரைக்கால்: காரைக்கால் சேத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் உற்சவம் நடைபெற்றது.  காரைக்கால் திருநள்ளார் அடுத்த சேத்தூர் பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று  முன்தினம் பூச்சொரிதல் பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின் பலவண்ண பூக்கள் கொண்ட  தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பலவண்ண பூங்களால் மகாமாரிய ம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !