நிதி ஒதுக்கியும் முடங்கி போனது வளர்ச்சி திட்டம்!
காஞ்சிபுரம்: பாரம்பரிய சுற்றுலா நகர வளர்ச்சி திட்டத்தில், இந்திய நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 3.5 ÷ காடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அத்திட்டப் பணிகள் துவக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசின் கடந்த ஆண்டு பட்ஜெட்டில், அமிர்தசரஸ், அஜ்மீர், மதுரா, கயா, அமராவதி, புரி, பாதாமி, வாரணாசி, வாரங்கல், துவாரகா, தமிழகத்தின் காஞ்சிபுரம், வேளா ங்கண்ணி ஆகிய, 12 நகரங்கள், பாரம்பரிய நகரங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த நகரங்களில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை ஆணையர் பிரவீன் பிரசாத் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்தார். அப் போது, மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், மின் வாரிய துறை நகர உதவி இயக்குனர், பொதுப்பணி துறை, அறநிலைய துறை அதிகாரிகள் போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் இருந்தனர். நகரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளும் தனித்தனி யே ஆய்வு செய்து, அறிக்கை மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, நகராட்சி ஆணையரிடம் அளித்தனர். அதை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. இத்திட்டத்தை செயல்வடிவில் கொண்டு வர, தனியார் முகமை ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் அதற்கான இறுதி வடிவத்தை தயார் செய்து, கடந்த ஆண்டு சமர்ப்பித்தனர். அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.