சின்னத்தடாகம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்!
கோவை: சின்னத்தடாகம் அட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேம் நேற்று நடந்தது. சின்னத்தடாகத்தில் நுாறாண்டு பழமை வாய்ந்த சுயம்பு வடிவிலான அட்டிமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு, புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. சுயம்பாக இருந்த அம்மன் சிலை கோவில் க ருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிக்குழு தீர்மானித்தது. இதற்கான விழா, ஜூன் 1ல் முளைப்பாலி கை மற்றும் தீர்த்தம் கொண்டு வருதலுடன் துவங்கியது. அன்றிரவு, முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, திருப் பள்ளி எழுச்சி, காப்பணிவித்தலை தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. லலிதாம்பிகை பீடம் ஜெகநாதசுவாமிகள் கலசாபிஷேகம் செய்துவைத்தார். திருக்குடங்கள் கோவிலை வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தும், அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலை சேர்ந்த சேகர், கணேசன் மற்றும் மகாலிங்கம் பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.