கடலுாரில் காயத்ரி யாகம்
ADDED :3452 days ago
கடலுார்: மழை வேண்டியும், உலக நன்மைக்காவும், 61 அந்தணர்கள் கலந்து கொண்டு, 1008 காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்பட்டு, சிறப்பு யாகம் கடலுாரில் நடந்தது.
கடலுார் தங்கவதி நகரில் உள்ள கோடி காயத்திரி ஜப கமிட்டி சார்பில், திருப்பாதிரிப்புலியூர் சங்கர மடத்தில் கோடி காயத்ரி யாகம் நடந்தது. பொங்கலன்று துவங்கி, வீடுகளில் தினம் 1008 முறை காயத்ரி மந்திரம் செய்த 310 பேரில் 61 அந்தணர்கள் இந்த யாகத்தில் பங்கேற்றனர். மழை பெய்யவும், பயிர்கள் செழிக்கவும், உலக நன்மைக்காவும் சங்கல்பம் செய்யப்பட்டது. டாக்டர் வாசுதேவன் ஏற்பாடு மற்றும் வழிகாட்டுதலில் இந்த யாகம் நடந்தது.