ரமலான் நோன்பு இன்று துவங்கியது
ADDED :3452 days ago
சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களில், பிறை தென்பட்டதால், ஒரு மாத ரமலான் நோன்பு, இன்று துவங்கும் என, தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து ரமலான் நோன்பு இன்று காலை முதல் துவங்கியது. இஸ்லாமியர்கள், ரமலான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், பிறை தென்பட்டதால், ரமலான் நோன்பு, இன்று அதிகாலை முதல் துவங்கும், என, தமிழக அரசின் தலைமை ஹாஜி, சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று முதல் ஒரு மாதத்திற்கு, அதிகாலை முதல், சூரியன் மறையும் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். ஒரு மாத நோன்பு முடியும் நாளில், ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.