துாய இருதய ஆண்டவர் ஆடம்பர தேர் பவனி
ADDED :3453 days ago
புதுச்சேரி: துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா பெரு விழாவில், ஆடம்பர தேர் பவனி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில், துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு பெருவிழா, கடந்த 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு திருப்பலி நடந்துவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நடந்தது. காலை 7:30 மணிக்கு, தர்மபுரி ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு, ஆடம்பர தேர் பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர்.