உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சம்பட்டி மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

ஈச்சம்பட்டி மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

ஆத்தூர்: ஈச்சம்பட்டியில், தேர் வெள்ளோட்ட விழா, நேற்று நடந்தது. ஆத்தூர் அருகே, ஈச்சம்பட்டி மாரியம்மன் கோவில் தேரின் சக்கரம், புதிதாக வடிவமைக்கப்பட்டது. நேற்று, புதிதாக வடிவமைத்த சக்கரம் பொருத்தப்பட்டு, தேர் வெள்ளோட்ட விழா நடந்தது. கோவில் வளாகத்தில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்துச்சென்றனர். அதில், ஆத்தூர், மல்லியக்கரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டியை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !