உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளிடம் எதை வேண்டிக் கொள்ளக் கூடாது?

கடவுளிடம் எதை வேண்டிக் கொள்ளக் கூடாது?

தாயுமானவர் பராபரக்கண்ணியில், ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று கடவுளிடம் வேண்டுகிறார். திருமூலரும் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று அனைவரும் இன்பமுடன் வாழ பிரார்த்திக்கிறார். மற்றவர் நலனுக்காக வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதே பக்தியின் அடிப்படை. ஒருவன் நமக்கு துன்பமே இழைத்தாலும் கூட, அவனுக்கும் தீங்கு உண்டாகட்டும், அவனைத் தட்டிக்கேள் என்ற விதத்தில் மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !