சிவ விரதங்கள்!
ADDED :3803 days ago
சிவபெருமானின் அருள் பெற விரும்புபவர்கள் எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
1. சோமவார விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது
3. திருவாதிரை விரதம் மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது.
6. பாசுபத விரதம் தைப்பூசத்தில் அனுஷ்டிப்பது.
7. அஷ்டமி விரதம் வைகாசி மாத பூர்வபட்ச அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.
8. கேதாரகவுரி விரதம் ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது மறுநாள்) இருப்பது.