உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கோவிலில் பாடகி சுசீலா தரிசனம்

சிதம்பரம் கோவிலில் பாடகி சுசீலா தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா சுவாமி தரிசனம் செய்தார். திரை உலகில் 17 ஆயிரம்  பாடல்களுக்கும்மேல் பாடி சாதனை படைத்த, பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா, கின்னஸ் விருது பெற்றுள்ளார். இவர், நேற்று காலை 8:30  மணிக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். சுசீலாவை, அவரது ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச்  சென்றனர். கோவிலில் கனகசபைக்கு சென்று நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தார். பின், அவர் கூறுகையில், எனக்கு  கிடைத்த பெருமை எல்லாம் கடவுள் தந்த பரிசு’ என்றார். சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, காலை 9.45 மணிக்கு, திருவாரூர் தியாகராஜர் ÷ காவிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !