எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்!
சுத்தம் சோறு போடும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், சுத்தம் சுவர்க்கமே தரும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். உடல்சுத்தத்துடன் மனசுத்தம் பற்றியும் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகள் ஆகிவிடுகின்றன. பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக்காரியங்களாகி விடுகின்றன. இஸ்லாம் சுத்தமுடையதாகும். ஆகவே, நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். ஏனென்றால் சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், என்கிறார்கள். சுத்தத்தின் பெருமை புரிந்து விட்டதல்லவா! இனியேனும், வீட்டையும், தெருவையும் மட்டுமல்ல, மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம்.