உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவு முழுவதும் நடந்த இரணியன் தெருக்கூத்து!

இரவு முழுவதும் நடந்த இரணியன் தெருக்கூத்து!

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே நடந்த இரணியன் தெருக்கூத்தை, ஏராளமான பொதுமக்கள்  விடியும் வரை கண் விழித்து ரசித்தனர். ÷ மட்டுப்பாளையம், சிறுமுகை பகத்துாரில் விநாயகர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவில், இரணிய  நாடக சபா சார்பில் இரணியன் தெருக்கூத்து நடந்தது. துாணில் இருந்து வெளியே வரும் நரசிம்மமூர்த்தி, இரணியனை கொன்று, பக்த பி ரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது தான், இக்கூத்தின் கதை.  இரவு, 9:00 மணிக்கு துவங்கிய தெருக்கூத்து, காலை, 7:30 மணி வரை நடந்தது. அனைவரும் விடியும் வரை கண் விழித்து, கூத்தை கண்டு ரசித்தனர். நாடக குழுவினர் கூறியதாவது: கடவுள் நம்பிக்கையை மையமாக  வைத்து, இக்கூத்து அமைந்துள்ளது. இதில், 15லிருந்து, 60 வயது வரை உள்ள, அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள், கைத்தறி நெசவாளர்கள் என,  30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் நடிக்கின்றனர்.  நவீன காலத்துக்கு ஏற்ப, எந்த  மாற்றமும் செய்யாமல், எங்கள் முன்னோர் பயன்படுத்திய  வேஷங்களை பயன்படுத்தி நடிக்கிறோம்.  நாட்டுப்புற கலைகளை வளர்க்க அரசு உதவி செய்ய வேண்டும். அழிந்து வரும் கலைகளை கற்க  இளைஞர்கள் முன் வரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !