காஷ்மீரில் 75 ஆண்டுகளுக்கு பின் மகா கும்ப திருவிழா
ADDED :3415 days ago
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்டேல்பர் மாவட்டத்தில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மகா கும்ப திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிந்து மற்றும் விதாஸ்டா நதியில் புனித நீராடினர். கடந்த 1941ம் ஆண்டு கடைசியாக அங்கு இத்திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் அங்கு மீண்டும் மகா கும்ப திருவிழா கொண்டாடப்படுகிறது.