பத்ரகாளியம்மனுக்கு இன்று கும்பாபிஷேகம்
ADDED :3416 days ago
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, உலகப்பனூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை, 10.40 மணிக்குமேல், 11.10 மணிக்குள் நடைபெற உள்ளது. முன்னதாக, காலை, 8.30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறும். மாலை, 5 மணிக்கு யாகம் நடக்கும். காலை முதல் மாலை வரை, அன்னதானம் நடக்கிறது.