ஆஞ்சநேயருக்கு வெண்ணெ, வடை மாலை சாத்தப்படுவதன் காரணம் என்ன?
ADDED :3449 days ago
பகவான் ராமபிரான் ஆஞ்சநேயரின் நெஞ்சத்தில் நித்யவாசம் செய்வதனாலும் ஆஞ்சநேயரின் நெஞ்சமானது குழைந்து வெண்ணெய் போல் இருப்பதன் காரணத்தினாலும் அவர் மார்பில் வெண்ணெய் சாத்தப்படுகிறது. பொதுவாக, உளுந்து என்பது தெய்வங்களுக்கான பரிகாரமாகச் சொல்லப்படுகிறது. உளுந்து பிராண சக்தியையும் அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வாயு பகவானின் ஸ்வரூபமாக இருப்பதினால் இது அவருக்குச் சாற்றப்படுகிறது. இது சம்பிரதாயமாக வந்தது.