உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலைகடலின் ஓரத்திலே!

அலைகடலின் ஓரத்திலே!

பாற்கடலில் பிறந்த அலைமகளுக்கு, சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோயில் உள்ளது. லட்சுமியின் எட்டு விதமான வடிவங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். கருவறையில் லட்சுமியும், நாராயணனும் கடலைப் பார்த்தபடி வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி வீற்றிருக்கின்றனர். இரண்டாம் தளத்தில் கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி காட்சி அளிக்கின்றனர். மூன்றாம் தளத்தில் தனலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். அஷ்டலட்சுமியின் அருளால் வளமான வாழ்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !