ஊத்துக்கோட்டை கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3509 days ago
ஊத்துக்கோட்டை:கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்த சுவாமியின் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம், சீதா லட்சுமண அனுமத் சமேதர, கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும், உற்சவர் காலை, இரவு வேளைகளில், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான இன்று காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.