சித்தாத்துார் மங்கள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3415 days ago
கண்டாச்சிபுரம்: சித்தாத்துார் மங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் மங்கள விநாயகர் ÷ காவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை 9:30 மணியளவில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் லட்சுமி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநாவுக்கரசர் திருமடத்தைச் சேர்ந்த தமிழ் ஓதுவார்கள் வேள்விப் பணிகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மங்கள விநாயகர் உற்சவ மூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது.