மோகாம்பரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
சிதம்பரம்: சிதம்பரம் காத்தப்பிள்ளை தெரு மோகாம்பரி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிதம்பரம் நகரில் பிரசித்தி பெற்ற மோகாம்பரி மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழா, கடந்த 20ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7.௦௦ மணிக்கு 4ம் காலம் யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. 9.30 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, ௧0.௦௦ மணிக்கு கோவில் விமானம், மோகாம்பரி மாரியம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் மோகாம்பரி மாரியம்மனுக்கு மகா அ பிஷேகம், சிறப்பு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நடந்தது. இரவு மோகாம்பரி மாரியம்மன் வீதி உலா வந்தார்.