ஹோமம் நடத்தும் முறை!
ADDED :3440 days ago
நாம் ஹோமம் நடத்தும் போது, யாக குண்டம் அமைத்து நெருப்பு மூட்டுகிறோம். அதில் ஆகுதி எனப்படும் பூஜை பொருட்களை இடுகிறோம். தேவர்களுக்கு அக்னி (நெருப்பு) மூலமாக உணவைக் கொண்டு சேர்ப்பதே இதன் குறிக்கோள். இவ்வாறு ஹோமம் செய்யும் போது, நாமே முழு பொறுப்பை ஏற்று நடத்தினால் முழுபலன் நமக்கு கிடைக்கும். மற்றவர்கள் மூலமோ, அவர்களது உதவி பெற்றோ ஹோமம் நடத்தினால் பாதியளவே பலன் கிடைக்கும் என்றும் தட்ச ஸ்மிருதி வாக்கியம் கூறுகிறது. ஹோமத்தை முறை தவறிச் செய்தால் எதிரிடையான பலன் உண்டாகும். அதனால் தகுதி மிக்க ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஹோமம் தொடக்கம் முதல் முடியும் வரை மனைவியுடன் அமர்ந்திருக்க வேண்டும்.